ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:25 IST)

சென்னையில் சைக்கிள்களையும் காணவில்லை.. சைக்கிள் பாதைகளையும் காணவில்லை.. முதல்வருக்கு அன்புமணி பதில்..!

அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து  பாமக தலைவர் அன்புமணி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?

முன்னதாக  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று அமெரிக்க தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார் என்பதும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்,.

அப்போதுதான் அவர் சைக்கிளில் பயணம் செய்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோவுக்கு ராகுல் காந்தி கூட பதில் அளித்து இருந்தார் என்பதும் சென்னையில் நாம் இருவரும் எப்போது சைக்கிளில் பயணம் செய்வோம் என்று கேட்டது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva