திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (12:08 IST)

சட்டப்பேரவை கூட்டம் நேரடி ஒளிபரப்பு! – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் தேர்தல் வாக்குறுதியில் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி பதில் நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்து வரவேற்பு தெரிவித்துள்ள பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் “தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் அறிந்து கொள்வது அவர்களது ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பாமக வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.