திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (09:36 IST)

கொரோனாவுக்கு சித்த மருத்துவம்:அன்புமணி ராமதாஸ் பரிந்துரை!

கொரோனா சிகிச்சை மையங்களில், மருத்துவமனைகளில் சித்த மருத்துவதையும் அனுமதியுங்கள் என அன்புமணி ராமதாஸ் பரிந்துரை. 
 
இது குறித்து அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையின் விவரம் இதோ... தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், கொரோனா நோயாளிகளை 5 நாட்களில் குணமடைய வைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி அறிவித்துள்ளார். 
 
இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால் உலக அளவில் தமிழர்களின் மருத்துவ முறைக்கு பெரும் புகழும், அங்கீகாரமும் கிடைக்கும்.
 
கொரோனா மையங்களில் முதலில் சில ஆயிரம் படுக்கைகளை இந்நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம். அதன்பின் மருத்துவம் அளிப்பதில் ஏற்படும் முன்னேற்றம், நோயாளிகளின் விருப்பம் ஆகியவற்றை பொறுத்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.