1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (15:19 IST)

வானிலை மையத்தை கொச்சைப்படுத்தவில்லை.. அன்புமணி ராமதாஸ் விளக்கம்..!

பாமக தலைவர் அன்புமணி இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய போது வானிலை ஆய்வு மையத்தை மூட வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியான நிலையை தற்போது அவர் வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
 
வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கவில்லை என்பதுதான் தனது ஆதங்கம் என்றும் தெரிவித்தார் 
 
 வெளிநாடுகளில் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து மக்களுக்கு தகவல் தெரிவித்து வரும் நிலையில் நம்மால் ஏன் துல்லியமாக அறிவிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான் தன்னிடம் இருந்தது 
 
இனிவரும் காலங்களில் அதிக மழை புயல் வெள்ளம் வரும்போது துல்லியமாக அறிவித்தால் தான் மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும் என்றும் மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran