1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2024 (10:43 IST)

உதயநிதிக்காக பாடுபடும் அன்பில் மகேஷ்.! தமிழ்நாட்டை காவி நாடாக மாற்ற முயற்சியா? ஜெயக்குமார்...

Udhayanithi Jayakumar
எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க அமைச்சர் அன்பில் பாடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊழல்-லஞ்சம் என கொள்ளை அடிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் கொள்ளைக்கார அரசிற்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை என்று கூறியுள்ளார்.
 
பொழுதுப்போக்கான சினிமா முதல் தாகத்திற்கு அருந்தும் தண்ணீர் பாட்டில் வரை இந்த ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்தி அராஜக தொழில் செய்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
இதை எல்லாம் பாதுகாக்க தமிழ்நாட்டை காவி நாடாக மாற்ற முயற்ச்சிக்கிறதா இந்த அரசு? என்றும் பாஜக அரசிற்கு பச்சை கொடி காட்டுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பணியா? என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்-மாணவர்களிடையே ஆயிரம் வன்முறைகள்! கல்லூரியை காட்டிலும் கஞ்சா-செல்போன் என பள்ளி வகுப்பறையில் பயன்படுத்தி‌ மாணவச் சமுதாயமே சீரழிவின் உச்சியில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க பாடுபடும் அன்பில் மகேஷ் அவர்களே..'மாணவர்கள் மனதில் மதவாதத்தை விதைக்க அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஜோக்கர் சர்க்கார் நடத்தும் பொம்மை முதலமைச்சர் சரியாக இருந்தால் இவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் நிகழுமா? என ஜெயக்குமார் கூறியுள்ளார்.