செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2024 (08:01 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுன்ட்டர்.. போலீஸ் அதிரடி

ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சென்னையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் சிபிசிஐடி போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றபோது அங்கு கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றதாகவும் இதனை அடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இது குறித்து ஆய்வு செய்து வருகிறா. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி போலீஸாரால் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva