1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2024 (15:46 IST)

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பதைபதைக்க வைக்கும் CCTV வீடியோ.. இணையத்தில் வைரல்..!

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை நடந்த போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவியின் வீடியோவை போலீசார் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை மேற்பார்வையிட்டு கொண்டிருக்கும் நிலையில் திடீரென இரண்டு புறமும் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல் யூனிபார்ம் அணிந்தவர்கள் ஆர்ம்ஸ்டாங் அவர்களை நெருங்கி கொண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர் சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டும் காட்சி அந்த சிசிடிவி வீடியோவில் உள்ளன. இந்த சிசிடிவி வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் சரமாரியாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் இந்த வீடியோவில் உள்ளனர் என்பதால் அவர்கள் தான் கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் இந்த சிசிடிவி வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது கொலை செய்தவர்கள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Edited by Siva