வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 14 மார்ச் 2021 (10:12 IST)

சோலாவா களமிறங்குறது ரிஸ்க் அண்ணே!? – விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி தினகரன்!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்து பேச உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுதாய் இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் ஏறத்தாழ கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இருந்து விலகியது. அதை தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்தது..

ஆனால் அதற்குள்ளாக தேமுதிக – அமமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், மற்றொரு புறம் தனித்து போட்டியிடும் வாய்ப்புகளை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்வதற்காக அமமுக தனது அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளதால் இன்று இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.