1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:50 IST)

அமைச்சர் உதயகுமார் டெலிபோன் பில் கட்டல..! – தகுதி நீக்கம் செய்ய அமமுக கோரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆர்.பி.உதயகுமார் டெலிபோன் பில் கட்டாததால் அவரது வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அமமுகவினர் மனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத ஆர்.பி.உதயகுமார் அதை தனது வேட்பு மனுவிலும் சுட்டிக்காட்டவில்லை என அமமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ள அமமுகவினர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாத்தூரில் இருந்தபோது கட்டாமல் இருந்த டெலிபோன் கட்டணம் 17,393 ரூபாயை கட்டாமல் அதை வேட்புமனுவிலும் மறைத்துள்ளதால் அவர் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.