திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (11:57 IST)

”இனிமே எதுக்கு வாழணும்.!!?” - அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்டவர் ராமஜெயம். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் ராமஜெயம் 5 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த ராமஜெயம் இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.