செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (08:39 IST)

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து!

Amitshah
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அவரது கட்சி குறித்து திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
அதேபோல் பல திரை உலக பிரபலங்கள் விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விஜய் அரசியல் கட்சி குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உள்ளது என்று கூறியதோடு ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் தான் யாரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva