1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (13:02 IST)

ஜூலை 9ல் அமித்ஷா தமிழகம் வருகை: இந்த முறையும் ரத்தாகுமா?

கடந்த ஆண்டு இரண்டு முறை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் தமிழகம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இரண்டு பயணமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூலை 9ஆம் தேதி அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று அம்மாநில பிரமுகர்களை சந்தித்து வரும் பாஜக தலைவர் அமித்ஷா, தமிழக வருகையின்போது முக்கிய பிரபலங்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வியூகம் அமைப்பது குறித்து அவர் சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.