1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (08:22 IST)

டெல்லி என்சிபி அலுவலகத்தில் இன்று ஆஜராகும் இயக்குநர் அமீர்! கால அவகாசம் கேட்டது என்ன ஆச்சு?

ஜாபர் சாதிக் போதை பொருள் விவகார வழக்கில் இயக்குனர் அமீர் ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.
 
முன்னதாக நேற்று வெளியான செய்தியின்படி போதைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் ரம்ஜான் முடிந்த பிறகு ஆஜராகிறேன் என்று அமீர் இமெயில் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தான் டெல்லியில் இருப்பதாகவும் இன்று என்சிபி அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாகவும் இயக்குனர் அமீர் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கால அவகாசம் கேட்டுவிட்டு அதன் பின்னர் திடீரென டெல்லி சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பப்படும் நிலையில் இன்றைய விசாரணையின் போது அமீர் இடம் பல கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமீர் சொல்லும் பதிலை வைத்து தான் அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரா? அல்லது சாட்சிகளில் ஒருவரா? என்பதை என்சிபி அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் குற்றவாளிகளில் ஒருவர் என்பது நிரூபணம் ஆனால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva