ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (13:28 IST)

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு.! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

Stalin
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகங்கள் தமிழக முழுவதும் துவங்கப்பட்டன. ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டதால் மக்களிடையே இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.
 
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவு திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த திட்டத்தை ஆளுங்கட்சி முடக்கிவிட்டதாகவும் அதிமுக குற்றம் சாட்டி வருகிறது.
 
இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். 
 
அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். 

 
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதில், புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடி, புனரமைப்பு பணிகளுக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.