மதுபாட்டிலில் ஆணுறை - குடிமகன்கள் அதிர்ச்சி
தஞ்சையில் ஒரு கடையில் வாங்கிய மது பாட்டிலில் ஆணுறை இருந்ததைக் கண்டு குடிமகன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர், தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், பணம் கொடுத்து பிராந்தி (குவாட்டர் பாட்டில்) வாங்கியுள்ளார். அதை அவர் குடிப்பதற்காக, ஆர்வமிகுதியில் திறந்த போது, உள்ளே வெள்ளை நிறத்தில் ஏதோ கிடப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, பிராந்தியை கிளாஸில் ஊற்றி பார்த்த போது, அதில் ஆணுறை கிடப்பது தெரிய வந்தது. உடனே, இது குறித்து, டாஸ்மாக் விற்பனையாளரிடம் அழகர்சாமி புகார் செய்துள்ளார். மது விற்பது மட்டுமே தனது பணி எனக் கூறி, அழகர்சாமி புகாரை டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால், ஆவேசம் அடைந்த அழகர்சாமி, தான் வாங்கிய மதுவை, டாஸ்மாக் கடை முன்பே கீழே ஊற்றி விட்டு நடையைக் கட்டினார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த குடிமகன்களுக்கும், இதைக் காதில் கேட்ட குடிமகன்களுக்கும், ஏற்கனவே குடித்த மதுபோதை எல்லாம் இறங்கிவிட்டதாம்.