திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (11:25 IST)

ஜெயலலிதா சிலை திறப்பிற்கு அஜித் தயாரித்த ட்ரோன்!? – சுவாரஸ்யமான தகவல்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வைக்கப்பட்டுள்ள சிலையை திறக்க நடிகர் அஜித் ஆலோசனையில் உருவான ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். நடிகராக இருந்தாலும் கார் ரேஸ், மெக்கானிக்கல் வேலைகள் போன்றவற்றிலும் ஆர்வமுடையவராக அஜித்குமார் உள்ளார். இந்நிலையில் ட்ரோன் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தக்‌ஷா குழுவின் ஆலோசகராகவும் நடிகர் அஜித் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மெரீனா கடற்கரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை திறக்கப்பட உள்ளது. பச்சை துணியால் மூடப்பட்டுள்ள இந்த சிலையை ட்ரோன் கொண்டு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அஜித் ஆலோசனையின் பேரில் தக்‌ஷா குழுமம் உருவாக்கிய ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.