திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (15:45 IST)

முதல்வர் முக.ஸ்டாலின் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக நிர்வாகி கைது

முதல்வர் முக.ஸ்டாலின் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிலர் அவதூறு வீடியோக்கள் பதிவிட்டதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழக பாஜக   மாநில செயலாளர்  எஸ்.ஜி.சூர்யா   தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு  பதிவிட்டதற்காக நள்ளிரவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர்  முதலமைச்சர் சமூக வலைதளப்பக்கத்தில் அவதூறு வீடியோ பரப்பியதாகப் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீஸாரர் அவரைப் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுகவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு  நின்று முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.