1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (17:16 IST)

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் -எல். கே. சுதீஷ் பேச்சு....

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா,கட்சியின் 20ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய பத்மபூஷன் விருது ஆகியவற்றை கொண்டாடும் வகையில் கோவை மாவட்டம் காரமடையில் தே.மு.தி.க முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
 
தே.மு.திக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முக வடிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க துனை செயலாளர் எல்.கே சுதிஷ் பங்கேற்று 1000க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் நலிந்தோருக்கு உதவி தொகை, தையல் மெஷின், அரிசி பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எல்.கே சுதிஷ்..... 
 
மத்திய அரசு கொடுத்த நாலாயிரம் கோடி ரூபாய் நிதி சென்னையில் 4 மணி நேரம் நீடித்த மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார் 
 
தனது மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ள திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்த சுதீஷ் பக்கத்து மாநிலமான ஆந்திராவை சுட்டிக்காட்டி  கூட்டணியில் அங்கம் வகித்த பவன் கல்யாணுனக்கு துணை முதல்வர் வழங்கப்பட்டது போன்று தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சித் தலைவரான காங்கிரஸ் செல்வ பெருந்தகைக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் 
 
வருகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் வெற்றி பெறுவோம் அதேபோல 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்ந்து நீடித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வருவார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்கள் இருப்பார் என பேசினார்.