திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Manikandan
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:30 IST)

முன்னாள் அமைச்சர் ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் நடிகை மனு

Manikandan
முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என நடிகை ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
 
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டை நடிகை ஒருவர் சுமத்தி இருந்தார் என்பதும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது 
 
இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது