வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (16:15 IST)

சாட்டை துரைமுருகன் கைதுக்கு அதிமுக கண்டனம்.! கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்.!

Jayakumar
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு‌ச்‌ செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு‌ச்‌ செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 
பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின்,அவருடைய ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்