புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (13:29 IST)

யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்

யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்காக ஏஐ தொழில் நுட்பம்  தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படவுள்ளது.

ரயில்மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ரூ.7.25 கோடியில்  நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு வனத்துறை திறந்துள்ளது/

தண்டவாளங்களின் ஓரம் 500 மீட்ட இடைவெளியில் 12 உயர் கோபுரங்கள் அமைத்து அதிக் கேரமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் 2021-2023 வரை 9028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன.

கடந்த2008  முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.