தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக... இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!!
முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அது இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
திமுக அரசு எடுத்துள்ள புது முயற்சி இது என்பதால் பொருளாதாரத்தில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.