1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (16:07 IST)

அரசியலுக்கு வந்த பிறகு என்னிடம் 26 ஆடுகள் அதிகரித்துள்ளது: அண்ணாமலை

Annamalai
அரசியலுக்கு வந்த பிறகு என்னிடம் 26 ஆடுகள் அதிகரித்துள்ளதாகவும் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 120 ஆடுகள் வைத்திருந்தேன் தற்போது 146 ஆடுகள் இருப்பதாகவும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். 
 
கரூரில் அண்ணாமலை ரகசியமாக மிகப்பெரிய மாளிகை கட்டி வருவதாக குற்றம் சாட்டப்படுவதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்ட நிலையில் எந்த இடத்தில் நான் கட்டுகிறேன் என்பதை நீங்களே போட்டோ எடுத்து பத்திரிகைகள் வெளியிடுங்கள். 
 
இங்கிருந்து கரூர் செல்வதற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் தான் ஆகும் தாராளமாக நீங்கள் சென்று நான் கட்டிய வீட்டை போட்டோ எடுத்து போடுங்கள் என்று கூறினார். 
 
மேலும் போலீஸ் முதல் இன்டெலிஜெலன்ஸ் வரை அனைத்தும் உங்களிடம் இருக்கும் முன்னிலையில் ஏன் இதை செய்ய முடியவில்லை என்றும் அவர் கேட்டார். 
 
அரசியலுக்கு வருவதற்கு முன்பு 120 ஆடுகள் வைத்திருந்தேன், தற்போது 146 ஆண்டுகள் வைத்துள்ளேன், இதுதான் எனது சொத்து, அதுவும் ஆடு குட்டி போட்டதால் தான் அதிகமானது என்றும் காமெடியாக அண்ணாமலை தெரிவித்தார்.
 
Edited by Mahendran