திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (10:09 IST)

மருத்துவமனையில் மதுசூதனன்; வதந்திகளை நம்ப வேண்டாம்! – அதிமுக ட்வீட்!

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து வெளியாகும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் “கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” என தெரிவித்துள்ளது.