திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (12:48 IST)

மதுரையை நீங்கள் புறக்கணித்தால், மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள்: அதிமுக

ADMK
மதுரைக்கு நீங்கள் எந்த திட்டமும் கொண்டு வராமல் புறக்கணித்தால் உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என அதிமுகவின் மருத்துவர் இளைஞர் அணி இணை செயலாளர் சரவணன் விமர்சனம் செய்து உள்ளார்.
 
 சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.64 லட்சம் கோடி முதலீடு பெற்று இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மதுரை மக்களுக்கு இதில் எந்தவிதமான பயனும் இல்லை 
 
மதுரைக்கு ஒரு ரூபாய் கூட எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதனை அடுத்து இது குறித்து  அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் சரவணன் கூறிய போது  முதலீட்டாளர் மாநாட்டில் மதுரைக்கு என்று எந்த திட்டமும் இல்லை. மதுரையில் நூலகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தாரே தவிர வேறு எந்த திட்டங்களையும் அவர் கொண்டு வரவில்லை. 
 
மதுரையில் 30 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் 7 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்று கூறிய திமுக தற்போது மதுரையை முழுவதுமாக புறக்கணித்து வருகிறது. மதுரையை நீங்கள் புறக்கணித்தால் மதுரை மக்கள் வரும் தேர்தலில் உங்களுக்கு சரியான பாடத்தை புகுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran