ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ3,000: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொருள்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பொருட்கள் தரமற்று இருந்ததால் இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூபாய் 3000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
மக்களுக்கு ரொக்கமாக பொங்கல் பரிசு வழங்கினால் முறைகேட்டுக்கு வழி வகுக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் இந்த ஆலோசனையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran