வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (13:07 IST)

உண்மைக்கு புறம்பானதுன்னு ஒத்துக்கோங்க! – பா.ரஞ்சித்துக்கு அதிமுக எச்சரிக்கை நோட்டீஸ்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா படத்தின் உண்மை தன்மை குறித்து பா.ரஞ்சித் தெளிவுப்படுத்த வேண்டுமென அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”. இந்த படம் பரவலான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த படம் திமுகவிற்கு ஆதரவாகவும், அதிமுகவை களங்கப்படுத்தும் விதமாகவும் உள்ளதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுக, சார்பட்டா படத்தில் இடம்பெறும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவை என பா.ரஞ்சித் ஒத்துக் கொள்ள வேண்டும் எனவும், இல்லாவிட்டால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.