1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:43 IST)

அதிமுக தலைகளுக்கு இனோவோ காரா? பாஜகவை நக்கல் அடித்த செல்லூரார்!

பாஜக தலைவர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்ததை கிண்டல் அடித்துள்ளார் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிப் பேச்சு வார்த்தைகள், முதல்வர் வேட்பாளர் குறித்த பரபரப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் நேற்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கட்சியினரிடையே பேசும்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்று அவர் கூறியது மாவட்ட தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுகவின் நிர்வாகிகளுக்கு பரிசு அளிக்கும் வழக்கம் ஏற்கனவே உள்ளதாகவும் அந்த வகையில் தற்போது பாஜக தலைவர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார். 
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு. அவர் கூறியுள்ளதாவது, பாஜக கை காட்டும் கட்சி அடுத்து ஆட்சி அமைக்கும் என்பது அவர்கள் கட்சியின் கருத்து. எங்கள் பாதை தெளிவான பாதை. கூட்டணி கட்சி தலைவர்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசி வருகிறார்கள். 
 
தேர்தல் நேரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். அதிமுகவில் இனோவா கார் கொடுக்க வேண்டும் என்றால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டும் என நக்கல் அடித்துள்ளார்.