திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:02 IST)

திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்: சிவகாசி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

edappadi
தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக கூறிக் கொண்டிருக்கின்றது என்றும் ஆனால் திராவிட ஆட்சியை உருவாக்கியது அதிமுக தான் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார் 
 
திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு முன்னூறு முறை முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றும் அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அதிமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்
 
பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதை ஓசிப்பயணம் என அமைச்சர் பொன்முடி நக்கல் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அது உங்கள் பணம் அல்ல என்றும் மக்கள் பணம் எல்லாம் என்றும் இதற்கெல்லாம் சேர்த்து தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார் 
 
தமிழகத்தில் 32 ஆண்டுகால அதிமுக ஆட்சி செய்துள்ளது என்றும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக தான் என்றும் அவர் மேலும் கூறினார்