20 ரூபாய் டோக்கனை நம்பி மறுபடியும் ஏமாற வேண்டாம்: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா
20 ரூபாய் டோக்கனை நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம் என ஆர்கே நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை ஆர்கே நகர் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நல உதவித் திட்டம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தற்போது நடைபெற்று வரும் அரசு சிறப்பாக மக்கள் தொண்டு செய்து வருவதாகவும் குறிப்பாக மழை வெள்ள காலங்களில் ஆர்கே நகரில் சூழ்ந்த தண்ணீரை அதிரடியாக அகற்றியது என்றும் நம் நகரையே சொர்க்க பூமியாக மாற்றியதாகவும் கூறினார்
மேலும் ஆர்கே நகரில் ஆளும் கட்சி எம்எல்ஏ வெற்றி பெற்றிருந்தால் மிக அதிகமாக முன்னேறி இருக்கும் என்றும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனன் தொகுதி மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருப்பார் என்றும் கூறினார்
எனவே மீண்டும் இரவோடு இரவாக கொடுக்கும் இருபது ரூபாய் டோக்கனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொய்யான பிரச்சாரத்தை நம்பி ஏமாந்தது எல்லாம் போதும் இனி ஒருமுறை ஏமாறக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார் அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது