சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 5 மே 2016 (18:00 IST)

இலவசங்கள் தாராளம்: அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா!

இன்றா? நாளையா? என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று ஈரோடு தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.


 
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கரூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.
 
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேசிய ஜெயலலிதா, பெரியார் பிறந்த பூமியில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
 
அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சில அறிவிப்புகள்:
 
* அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
 
* தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை.
 
* சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு எளிமையாக்கப்படும்.
 
* மீனவர் நிவாரண தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும்.
 
* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம்.
 
* விவசாய கடன் தள்ளுபடி.
 
* காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* மீன்வர்கள் எஸ்.டி. பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
 
* மகப்பேறு உதவிதொகை ரூ.18000-ஆக உயர்த்தப்படும்.
 
* 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை.
 
* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.
 
* மடிகணினியுடன் இலவச இணையதள வசதி.
 
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
 
* இலவச செட் ஆஃப் பாக்ஸ் வழங்கப்படும்.
 
இது தவிர மேலும் பல இலவசங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் தாராளமாக இடம் பெற்றுள்ளன. மேலும் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் வெப்துனியாவுடன்.