வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

திமுக, அதிமுக, அமமுக: 3 கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று!

மார்ச் 17ஆம் தேதியான இன்று ஏகாதசி மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்கின்றார்.
 
அதேபோல் இன்று காலை 9.30 மணிக்கு  கிரவுன் பிளாசா ஒட்டலில்  கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தொகுதி பட்டியலை   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிடுகிறார்கள். அதனையடுத்து அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஒரே ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டு மீதி 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள தினகரனின் அமமுக கட்சியும் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளது
 
ஒரே நாளில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, அமமுக என மூன்று கட்சிகளும் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது