ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் பங்களாவில் புதரில் 91 லட்சம் ரூபாய் பறிமுதல் !
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாரின் சொகுசு பங்களாவில் 91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அரசியல் கட்சியினரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாரின் சொகுசு பங்களா அருகே முட்புதரில் இருந்து 91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.