இலை, பூ, கனி இணைந்த இயற்கை கூட்டணி: செல்லூர் ராஜூ
அதிமுகவின் இரட்டை இலை, பாஜகவின் தாமரைப்பூ மற்றும் பாமகாவின் மாங்கனி ஆகியவை இணைந்து இலை, பூ, கனி இணைந்து அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக அமைந்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவை இழந்து அதிமுக தாயில்லா பிள்ளையாக இருப்பதால் சதிசெய்ய எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் அதிமுகவுக்கு எதிராக சதி செய்யும் மு.க.ஸ்டாலினின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்று மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, 'தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டவுடன் வெளிநாட்டு நகரங்களுக்கு இணையாக மதுரை மாநகரம் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்