வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 16 மார்ச் 2024 (22:55 IST)

விஜய் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு!

vijay-bussy anand
மக்களவை தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,  நாளை முதல் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஜய். இவர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினார்.
 
மகளிர் தினத்தன்று கட்சியின்  உறுப்பினர் சேர்க்க தொடங்கப்பட்டு,  செயலி மூலம் லட்சக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியானது.
 
விஜயின் கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது.
 
மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்த நிலையில், அவர் தனிக் கட்சி தொடகியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், தன் கட்சியை வலுவாக்க கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 
அதேபோல் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தினம் தோறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள்  நியமனம், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 
இன்று மக்களவை தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,  நாளை முதல் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.