ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (18:59 IST)

உயிரிழந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த.பானு ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றி, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’சிவகாசி, மண்குண்டாப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் முருகேஸ்வரி மற்றும் பானு எனும் இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துவதுடன், இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.