செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (16:38 IST)

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்; திவாகரன்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

 
கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது.
 
இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறி இருந்தார். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலை சமம் என்று கூறியுள்ளார்.
 
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் கூறியதாவது:-
 
தினகரன் தற்காலிக அரசியல் இயக்கம் தொடங்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது. நாங்களும் ஆன்மீக அரசியல் தான் செய்கிறோம். ஆன்மீக அரசியல் ஏற்புடையதுதான். நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது. 
 
கமலின் டுவிட்டர் பதிவுகள் தலைமைக்கு தகுதியில்லாதவர் என்பதை வெளிக்காட்டுகிறது. ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே ரஜினியும், கமலும் பேசுகின்றனர் என்று கூறினார்.