1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (12:17 IST)

கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்த சிவகார்த்திகேயன்

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
 
நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், நேற்று காலை நடிகர் விஜய் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் இரவு நடிகர் அஜித் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 
மேலும் கவுண்டமணி, செந்தில், நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
 
இந்நிலையில் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.