வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (21:24 IST)

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும்...அர்ஜூன் சம்பத் விருப்பம் !

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும்...அர்ஜூன் சம்பத் விருப்பம் !

அறிவாலயம் என்பது தி.மு.க குடும்ப சொத்து என்றும் அதில் அன்பழகனுக்கு இடமில்லை என்றும், கோயில் நிலங்களை அரசு பட்டா போட்டு தர கூடாது என்றும் அதற்கு பதில் அவர்களை வாடகையில் வசிக்க உத்திரவு போட வேண்டுமென்றும் கரூரில் இந்து மஹா சபா கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்தார்.
 
 
இந்து மகா சபா கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது., கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் நிறைய உள்ளது. அதனை மீட்பதற்கும், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டுமென்றார்.
 
அதே போல, பிறமதத்தினை சார்ந்தவர்களுக்கு கூட, வாடகை அல்லது குத்தகைக்கு கொடுக்க வேண்டிய அவலநிலை தொடர்வதாகவும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டுமென்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். 
 
மேலும், சுவாமி பேரில் பட்டா இருந்தால் அதனை மாற்ற கூடாது மாற்றவும் முடியாது. ஆகவே தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பதாக உத்திரவு பிறப்பித்தது. இது கோயில் சொத்துக்கள் கொல்லை போக்கும் சம்பவத்தினை ஏற்படுத்தும், இது ஒரு அநீதி, ஏழை மக்களுக்கு நிலங்கள் கொடுப்பது தவறில்லை, ஆனால் அந்த பட்டா நிலம் சுவாமி பேரில் இருந்தால் அதை எப்படி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்றார். ஆகவே இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆன்மீக இந்து விஷமிகள். பரப்பி விட்ட குழப்பங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ந்து மத்திய அரசினை குறை கூறுவதையேயும், விஷம பிரச்சாரத்தினையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவதற்காகவும், அதற்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டார். 
 
கோயில் சொத்துக்களை திராவிட ஆட்சிகளின் கீழ் கொள்ளை போய் உள்ளது. சி.ஏ.ஏ போராட்டம் வண்ணாரப்போட்டையில் தொடங்கி, தாராபுரம், திருப்பூர், கம்பம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக்க பட்டுள்ளது. மதக்கலவரத்தினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தினை நடத்துகின்றனர். ஆகவே நீதித்துறையையும், காவல்துறையினரையும் முஸ்லீம் அமைப்புகள் மிரட்டுவதாகவும், இந்த சி.ஏ.ஏ போராட்டத்திற்காக காவல்துறையினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துக்கின்றன. ஆகவே காவலர்களுக்கு மன உளைச்சலை போக்கி தமிழகத்தில் ஒரு அமைதியை ஏற்படுத்த தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமென்றார். இதனை தொடர்ந்து தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன் உடல், அண்ணா அறிவாலயத்தில் வைக்க வில்லை என்கின்ற கேள்விக்கு, அண்ணா அறிவாலயம் என்பது திராவிட முன்னேற்றக்கழகத்தின் குடும்ப சொத்து அண்ணாத்துரை உருவாக்கிய கட்சியினை கருணாநிதி குடும்பத்தினர் கைப்பற்றி கொண்டனர். அதில் அன்பழகனுக்கும் இடம் இல்லை என்றார். 
 
மேலும், ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் முழு ஈடுபாடு கொண்டவர், ரஜினிகாந்த் தான் முதல்வராக வேண்டுமென்றும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றதோடு, ரஜினிகாந்தினை முன்நிறுத்தி தான் அடுத்த 2021 பொதுத்தேர்தல் என்றும் அதில் ரஜினிகாந்த் தான் முதல்வராக வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.