வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:28 IST)

1800 மாணவர்களை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் !

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அங்குள்ள இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சியால்   உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை மேலும் 12 மாணவர்களுக்கு சென்னை வர உள்ளனர். மாணவர்களின் பயண செலவுகளை அரசே ஏற்கும் எனவும், பதிவுசெய்துள்ள 1800 மாணவர்களை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளர்.