வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:27 IST)

ஆவின் தீபாவளி விற்பனை… இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை!

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் நிறுவன இனிப்புகள் சுமார் 85 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் இனிப்புகளை ஆவின் நிறுவனத்தில்தான் கொள்முதல் செய்யவேண்டும் என அறிவுறுத்தியதை அடுத்து இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ஆவின் இனிப்புவகைகள் விற்பனை சாதனைப் படைத்துள்ளது. சுமார் 85 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 30 கோடி ரூபாய் அதிகமாகும். இதை பால்வளத்துறை அமைச்சர் மு நாசர் அறிவித்துள்ளார்.