ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2017 (12:25 IST)

எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ..

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்.ல்.ஏ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இரண்டாக பிளவுபட்ட அதிமுகவில் ஓபிஎஸ் பக்கம் இருந்தார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுகுட்டி. அவர் சமீபத்தில் ஓபிஎஸ் அணி தன்னை புறக்கணிப்பதாக கூறி அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில், அவர் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவித்த போது “எனது கவுண்டம்பாளையம் தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கு சட்டசபையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். அதனால் என்னை ஓ.பி.எஸ் அணி புறக்கணிக்க தொடங்கியது. அதனால் அந்த அணியிலிருந்து விலகினேன்.
 
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிந்ததால் எடப்பாடி அணியில் இணைந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.