1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2025 (09:09 IST)

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

Aadhav arjuna

தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரிவு பொது செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜூனா, திருமாவளவனை நேரடியாக சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா, தோழமை கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், விசிகவினர் பலரும் அவரை கண்டித்து வந்ததால் அவரை கட்சியை தற்காலிக நீக்கம் செய்வதாக கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதை தொடர்ந்து கட்சியை விட்டு நிரந்தரமாக விலகிய ஆதவ் அர்ஜூனா, நேற்று தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

 

அங்கு அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. பதவி பெற்றதும் நேராக திருமாவளவனை சந்தித்து ஆசிப்பெற்றார் ஆதவ் அர்ஜூனா. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் அரசியல் பயின்ற இடம் விசிகதான். எப்போதுமே திருமா அண்ணன் தான் என் ஆசான். அவர் சொல்லிக்கொடுத்த வழியிலேயே நான் தவெகவில் பயணிப்பேன். என்னை வாழ்த்திய திருமா அண்ணன், கட்சியை கொள்கை பிடிப்போடு முன்னேற்ற வாழ்த்தியுள்ளார்.

 

திருமா அண்ணனும், விஜய்யும் இரு வேறு துருவங்கள் அல்ல. கொள்கை ரீதியாக ஒரே துருவத்தில் நிற்பவர்கள். இனி வரும் காலங்களிலும் எனக்கு எந்த ஒரு பிரச்சினை, சந்தேகம் என்றாலும் நான் திருமா அண்ணனிடமே ஆலோசனைகள் கேட்டு செயல்படுவேன்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K