திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (13:56 IST)

வில்லங்கமான பேஸ்புக் காதல்: இளம்பெண்ணை கதற கதற கற்பழித்த ஊனமுற்ற வாலிபர்!!!

நாகர்கோவிலில் இளம்பெண் ஒருவர் ஊனமுற்ற வாலிபரால் கதற கதற கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகர்கோவிலை சேர்ந்த ரம்யா(பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ரம்யாவிற்கு பேஸ்புக் மூலம் ஏசுநேசன் என்ற ஊனமுற்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
 
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர்.
 
இந்நிலையில் ஏசுநேசன் ரம்யாவை நேரில் பார்க்க அழைத்துள்ளார். அதன்படி ரம்யா தனது பேஸ்புக் காதலனை பார்க்க சென்றுள்ளார். அப்போது ரம்யாவை காரில் அழைத்து சென்ற ஏசுநேசன், அவனது நண்பனோடு சேர்ந்து ரம்யாவை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு மாணவியை காரிலிருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளான்.
 
இதனால் பதறிப்போன மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து அந்த 2 அயோக்கியன்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.