1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (08:21 IST)

சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவி

நாமக்கல்லில் சொத்துக்காக கணவனை கடத்த முயன்ற மனைவியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் ஏ.எஸ் பேட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. செல்வராஜ் பைனாஸ் தொழில் நடத்தி வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால், அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சொத்து அனைத்தையும் தன் பெயரில் எழுதி வைக்கும்படி ராஜேஸ்வரி கூறியதால் தான் இருவருக்கும் இடையே தகராறு என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை கடத்தி சொத்து அனைத்தையும் ராஜேஸ்வரிக்கு மாற்றும்படி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த செல்வராஜ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக அந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், ராஜேஸ்வரி தான் இப்படி செய்ய சொன்னார் என கூறினர்.
இதனையடுத்து போலீஸார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விஷயமறிந்து தலைமறைவான ராஜேஸ்வரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.