செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (09:00 IST)

தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் மட்டும் நடைபெறும் யுத்தம்: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மட்டும் யுத்தம் நடைபெறுகிறது என்று ஓசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 
 
திமுகவினர் என்ன பேசினாலும் உயர்ந்த பதவிக்கு யாரும் போக முடியாது, ஆனால் பாஜகவில் கீழ்நிலை தொண்டரும் உயர்ந்த நிலைக்கு போக முடியும். உத்தர பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நான்கு நாட்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பத்தாயிரம் கோடிக்கு ஆன புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு சென்றனர். ஆனால் முதல்வர் ஒரு வாரம் வெளிநாட்டுக்கு சென்று 3000 கோடி புரிந்துணர் ஒப்பந்த மட்டுமே போட்டு வந்ததாக கூறியுள்ளார். 
 
முதல் முறையாக பாஜகவை பார்த்து திமுக பயப்படத் தொடங்கிவிட்டது, நமது தொண்டர்கள் போய் வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. 
 
ஜல்லிக்கட்டுக்கான தடையை முழுமையாக நீக்கி, சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு பெற்று தந்தது பாஜக அரசு தான். விழுப்புரத்தில், விஷசாராயத்தில் 22 பேர் இறந்துள்ளது சாவு இல்லை கொலை. டாஸ்மாக் கடைக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்று அண்ணாமலை பேசினார்.
 
Edited by Siva