1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (07:55 IST)

அயோக்கிய கொள்ளையர்களால் இரண்டாக முறிந்த அரசு ஆசிரியையின் கால்கள்

திருச்சியில் செயின் பறிப்பு சம்பவத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையின் கால்கள் இரண்டாக முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் நகை கொள்ளையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மலையடிப்பட்டி ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணி புரிந்து வந்த பெண்மணி ஒருவர் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த திருட்டு அயோக்கிய கும்பல், ஆசிரியையின் கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்றனர்.
இந்த செயின் பறிப்பின் போது ஆசிரியையின் கால் இரண்டாக முறிந்து விட்டது. அருகிலிருந்தவர்கள் அந்த ஆசிரியையை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் போலீஸார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.