திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (15:44 IST)

கல்லூரியில் மாணவனுக்கு மொட்டை அடித்து ராகிங்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

ragging
கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த வளாகத்திலேயே விடுதியில் உள்ள நிலையில்  மாணவர்கள் அங்கு தங்கியுள்ளனர். இந்தக் கல்லூரியில் திரூப்புர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது நபர் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் அந்த மாணவரை சீனியர் மாணவர்கள் சிலர் தங்கள் விடுதி அறைக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணமில்லை என்று கூறவே, சீனியர் மாணவர்கள் அவரை தாக்கி,  மொட்டையடித்து, அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளளார். இதையடுத்து,  பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் வந்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.  இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராகிங்கில் ஈடுபட்டு கைதான 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.