வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (17:30 IST)

கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி – சேலத்தில் பயங்கரம்

சேலத்தில் உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்து கற்பழித்த ரவுடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் அருகேயுள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக தனது அக்காளின் கணவருடன் சேலத்திற்கு வண்டியில் சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு திரும்ப வந்து கொண்டிருக்கும்போது பைக்கில் வந்து வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அக்காள் கணவரை தாக்கியுள்ளது. பிறகு அவரிடம் இருந்த பணம், அவர் அணிந்திருந்த நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அப்போது அந்த ஐந்து பேர் கும்பலில் ஒருவன் அந்த மாணவியை தூக்கி சென்று ஒரு புதரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளான்.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளான். இந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்க தயக்கம் காட்டியுள்ளனர். குடும்ப கௌரவம் போய்விடுமே என யோசித்துள்ளனர். ஆனால் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என முடிவு செய்த குடும்பத்தினர் இரண்டு நாட்கள் கழித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.