செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:23 IST)

சீமானை கைது செய்ய ஆர்ப்பாட்டம்! வீட்டை முற்றுகையிடுவோம் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியின் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் நல பேரமைப்பு தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் தங்கள் இனத்தை பற்றி பேசியதாக தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்கார நல பேரமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 
 
பழங்குடியினர் நரிக்குறவர் சமூக மக்களை தொடர்ந்து சீமான் இழிவுபடுத்தி வருவதாகவும் அதனால் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பெரம்பலூரில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் நலப் பேரமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. 
 
மேலும் நான் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகை விடுவோம் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran